VIDEO: 'ப்பா.. என்ன ஒரு FINISH!.. இப்படி ஒரு வைரத்த பார்த்திருக்கவே முடியாது!.. 102 கேரட்'ல... உலகையே வியக்க வைத்த அதிசயம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய, சிறு கீறல் கூட இல்லாத, காண்பவர்களை வசீகரிக்கும் 102 கேரட் வைரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![worlds most expensive flawless diamond 102 carat sothebys set record worlds most expensive flawless diamond 102 carat sothebys set record](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/worlds-most-expensive-flawless-diamond-102-carat-sothebys-set-record.jpg)
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பணக்காரர்கள் தங்கத்திலும், வைரத்திலும் முதலீடுகளை குவித்து வருகின்றனர். இதனால், சமீப காலங்களில் தங்க விலை உச்சம் தொட்டது.
இந்நிலையில், 102.39 கேரட் வைரம் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. ஓவல் வடிவத்தில் இருக்கும் இந்த வைரம், அதன் தன்மையில் உலகிலேயே இரண்டாம் மிகப் பெரியதாய் கருதப்படுகிறது.
மேலும், இந்த வைரத்தின் ஆரம்ப விலையாக ரூ.73 கோடி ($10 மில்லியன்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ரூ.220 கோடி ($30 மில்லியன்) வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் விலையுயர்ந்த ஆபரணங்கள் பட்டியலில் இந்த வைரமும் இணைந்துள்ளது.
இவ்வளவு அதிக விலைக்கு அந்த வைரம் ஏலம் விடப்படுவதற்கான காரணம், அது சிறு கீறல் கூட இல்லாமல், மிகத்தெளிவாக வெட்டப்பட்டிருப்பது தான். அதுமட்டுமின்றி, 100 carat-ஐ விட அதிகமாக இருக்கும் வைரங்கள் மிகவும் அரிதானவை. அவற்றுள், இதுவும் ஒன்று.
வரும் அக்டோபர் 5 அன்று, ஹாங்காங்கில் நேரலை வாயிலாக இவ்வைரத்தின் ஏலம் நடைபெற இருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)