'1 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி'... 'அதுல இந்தியாவுல மட்டும்'... 'தொடர் சர்ச்சைகளைத் தாண்டி'... 'ஜெட் ஸ்பீடில் செல்லும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி 2020-2021ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை முதல்முதலாக நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என கடந்த மாதம் அறிவித்த ரஷ்யா அதற்கு 'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிட்டுள்ளது. இந்த தடுப்பூசி அவசர கதியில் தயாரிக்கப்பட்டுள்ளதென பல சர்ச்சைகள் எழுந்ததற்கு இடையே, முன்னதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தெரிவித்திருந்த நிலையில், தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் ஸ்புட்னிக்-வி நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கடந்த வாரம் ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது 2020-2021ஆம் ஆண்டுக்குள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போடப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஏற்கனவே இந்த தடுப்பூசியை வெளிநாட்டிற்கும், பிரேசிலிய மாநிலமான பஹியாவிற்கும் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதனுடன் பிரேசில் சந்தைக்கு 50 மில்லியன் டோஸ் வாங்கப்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு ஒப்பந்தம் மூலம், கஜகஸ்தான் ஆரம்பத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை வாங்க உள்ளதாவும், பின்னர் அதன் அளவு 5 மில்லியன் டோஸ்களாக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவிலும் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
