'அப்பா ஒரு உண்மையை சொல்ல போறேன் டா'... '18 வருஷம் கழிச்சு தெரிய வந்த ரகசியம்'... 'உடைந்துபோன இளம்பெண்'... மனதை விட்டு மாறாத ரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் வாழ்ந்து வரும் யாசிகா பெர்னாண்டோ என்பவர் தனது கணவர் திலக் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், யாசிகாவுக்கு 18 வயதாக இருந்த போது, அவரது பெற்றோர்களான டொனால்டு மற்றும் யசந்தா ஆகியோர் அதிர்ச்சி தகவல் ஒன்றை அவரிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் உன்னுடைய வளர்ப்பு பெற்றோர்கள் தான் என்றும், இலங்கையில் வைத்து மூன்று மாதத்திலேயே உனது பெற்றோர்கள் உன்னை தத்து கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கையின் ஒரு வீட்டில் இருந்து உன்னை கை குழந்தையாக நாங்கள் பெற்றுக் கொண்ட போது, அந்த வீட்டிற்குள் இருந்து ஓவென பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறியதை டொனால்டு மற்றும் யசந்தா ஆகியோர் நினைவு கூர்ந்தனர்.
முன்னதாக, 1980 களில் யாசிகாவை வளர்த்த டொனால்டு மற்றும் யசந்தா ஆகியோர் இலங்கையில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். வளர்ப்பு பெற்றோர்களை போல இல்லாமல் சொந்த தாய் தந்தையரை போல அவர்கள் இருந்ததால் யாசிகாவுக்கு தன்னுடைய உண்மையான பெற்றோர்களின் எண்ணம் அதிகளவில் வரவில்லை.
இதனையடுத்து, யாசிகா தனது 31 ஆவது வயதில் இவானி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்போது தான் தனது உண்மையான தாய் குறித்த ஏக்கம் யாசிகாவுக்கு வந்துள்ளது. இதே போல நான் இருக்கும் போது தான் என்னையும் அவர் தத்து கொடுத்திருக்க வேண்டும். இப்படி அருமையான குழந்தையாக நான் இருந்த போது, எப்படி என்னை அவர்களால் தத்து கொடுக்க முடிந்தது? என்ற பல கேள்விகள் யாசிகாவின் மனதில் ஓடியுள்ளது.
அப்போது தன்னை பெற்ற தாயை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என யாசிகா முடிவு செய்துள்ளார். கணவர் திலக்கை அழைத்துக் கொண்டு இலங்கை சென்ற யாசிகா, தான் பிறந்த இடமான கொழும்பு பகுதிக்கு சென்று சிலரின் உதவியுடன் தாயைத் தேடியுள்ளார். இதனையடுத்து, தன்னை தத்து கொடுக்க ஏற்பாடு செய்த கான்வென்ட் சென்று தனது தாயை குறித்து விசாரித்துள்ளார்.
அதன்பிறகு, அவரை தாயைக் கண்டுபிடிப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதாலும், தனக்கு உடனடியாக லண்டன் திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததாலும், தனது தாயை சந்திக்க முடியாமலேயே லண்டன் திரும்பினார் யாசிகா. அதற்கு பின், இலங்கையில் தாயை தேட உதவி செய்தவரான சிரி சில்வா என்பவர், முயற்சி செய்து யாசிகாவின் தாயைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக தற்போது யாசிகாவால் இலங்கை செல்ல முடியாது என்பதால் வீடியோ கால் மூலம் யாசிகா தனது தாயைக் கண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த அழைப்பில், என்னை ஏன் தத்து கொடுத்தீர்கள் என யாசிகா தனது தாயிடம் கண்ணீர் மல்க கேள்வி கேட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், வீடியோ காலில் மேற்கொண்டு இருவரும் என்ன பேசினார்கள் என்பது சரிவர தெரியவில்லை.