Naane Varuven D Logo Top

"பெத்தவங்களோட விவசாயத்தை கையில எடுத்தோம்".. ஐடி வேலையை உதறிவிட்டு களத்தில் குதித்த பட்டதாரிகள்!!.. அடுத்து நடந்த அற்புதம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 07, 2022 07:22 PM

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே அமைந்துள்ள குத்தாரிபாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பெயர் புவனேஸ்வரி. இவர்கள் இருவருமாக இணைந்து விவசாயம் செய்வதையே பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

kovai siblings quit engineering jobs starts milk factory

Also Read | Mortuary'ல் இருக்கும் உடலை பார்க்க போன மருத்துவர்.. பையை திறந்ததும் கண்ட அதிர வைக்கும் காட்சி!!

கிருஷ்ணசாமி - புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் வருண் பிரகாஷ், சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இளைய மகன் ரஜி பிரசாத் சாஃப்ட்வேர் இன்ஜினியர் படித்துள்ளார்.

இவர்கள் இருவருமே பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றதுடன் தனியார் நிறுவனத்திலும் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருந்த போதும், தங்களின் பெற்றோரின் விவசாய வேலை மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளும் இவர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. அது மட்டுமில்லாமல், சுயதொழில் செய்ய வேண்டும் என்றும் சகோதரர்கள் விரும்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மூத்த சகோதரர் வருண் பிரகாஷ் முதலில் வேலையை உதறி விட்டு பசு மாடுகளை வாங்கி, பால் கறந்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தொழிலும் சிறந்த முறையில் முன்னோக்கி சென்ற பின்னர், அவரது இளைய சகோதரரான ரஜி பிரசாத்தும் ஐடி கம்பெனி வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதன் பின்னர், சகோதரர்கள் இருவரும் இணைந்து இன்னும் நிறைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி சகோதரர்கள் வருண் மற்றும் ரஜி ஆகியோர் பேசுகையில், விவசாய தொழில் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பம் முதல் இருந்தது என்றும், சரியாக திட்டம் போட்டு பால் பண்ணை துவக்கி தற்போது விற்பனை நிலையத்தை துவக்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்தில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது என்றும் இளைஞர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்றும் இந்த சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர். பொறியியல் பணியில் கைநிறைய சம்பளத்துடன் வேலையில் இருந்த போதும், விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளில் இறங்கி அதில் வெற்றி பெற்றுள்ள சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | Miss TamilNadu வென்ற கூலி தொழிலாளி மகள்.. தடையை தாண்டி சாதிச்சது எப்படி??.. Exculsive!!

Tags : #KOVAI #SIBLINGS #ENGINEERING JOBS #MILK FACTORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kovai siblings quit engineering jobs starts milk factory | Tamil Nadu News.