'விசா வந்தா கடனை அடைக்கலாம்'... 'எதிர்பார்ப்பில் இருந்த இந்தியர்கள்'... இந்த நேரத்தில் வந்த அபுதாபி இளவரசரின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்அபுதாபி, சவூதி, துபாய் போன்ற நாடுகளில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

கொரோனா பரவல் உலக பொருளாதாரத்தையே அடியோடு புரட்டிப் போட்டுள்ள நிலையில், இது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலை பார்த்த பல தொழிலாளர்களின் வேலை பறிபோனது. அந்த வகையில் அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தில் வேலை பார்த்த பல தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்தார்கள்.
இந்த கொரோனா பிரச்சனை எப்போது சரி ஆகும், மீண்டும் எப்போது வேலைக்கு விசா வரும் எனப் பலரும் காத்திருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் தற்போது தித்திப்பான செய்தி ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ''ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது. வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் நாம் நெருக்கடியிலிருந்து மீண்டு, அதிலிருந்து பல பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியதற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்'' என இளவரசர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய கொரோனா தொற்றுகள் ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், மீண்டும் வேலைக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் என அங்கு வேலை பார்த்து விட்டு தாய் நாட்டிற்குத் திரும்பிய பலரும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற செய்திகள்
