‘வீட்டோடு சேர்த்து கணவரும் விற்பனைக்கு’.. விநோத விளம்பரம் செஞ்ச மனைவி.. காரணத்தை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டுடன் சேர்ந்து கணவரையும் விற்பதாக பெண் ஒருவர் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![US woman sells house with her ex-husband goes viral US woman sells house with her ex-husband goes viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-woman-sells-house-with-her-ex-husband-goes-viral.jpg)
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரிஸ்டல் பால். இவர் பேஸ்புக் மற்றும் ரியல் எஸ்டேட் தளங்களில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் இவரது சொந்த வீடுகளில் ஒன்றை விற்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீட்டில் நபர் ஒருவரும் போஸ் கொடுத்தப்படி நிற்கிறார். இவர்தான் கிரிஸ்டல் பாலின் முன்னாள் கணவர் ரிச்சர்ட் ஷைலு (53 வயது).
ஏழு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து ஆனாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இருவரும் சேர்ந்து அவர்களின் மகனைப் பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். தான் பிரிந்ததற்கு பிறகு ரிச்சர்ட் ஷைலு வாழ்வதற்கு ஒரு வீடு கிடைக்கும் என்பதால்தான், வீட்டோடு சேர்த்து அவரையும் விற்பதாக கிரிஸ்டல் பால் தெரிவித்துள்ளார்.
இந்த வீடு பனாமா கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. 3,80,000 டாலருக்கு வாங்கப்பட்ட இந்த வீடு, தற்போது 6,99,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதாக கிரிஸ்டல் பால் தெரிவித்துள்ளார். வீட்டுடன் சேர்த்து கணவரையும் வாங்கிக் கொண்டால் சிறப்பு தள்ளுபடியும் உண்டு என கிரிஸ்டல் பால் தெரிவித்துள்ளார். வீட்டை பராமரிக்கவும், சமைக்கவும் இவர் உதவியாக இருப்பார் என வேடிக்கையாக கிரிஸ்டல் பால் கூறியுள்ளார். இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)