தப்பு பண்ணது அவர் இல்லையா??.. 38 வருஷம் சிறை.. இத்தனை நாள் கழிச்சு DNA டெஸ்ட்டில் தெரிய வந்த உண்மை
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 38 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர், தற்போது விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னால் உள்ள காரணம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு கொலை மற்றும் இரண்டு கொலை முயற்சி குற்றங்களுக்காக Maurice Hastings என்ற நபர் ஒருவர் கைது செய்யப்ட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அவர் 31 வயதில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 38 ஆண்டுகள் கழித்து கலிஃபோர்னியா சிறையில் இருந்து ஹேஸ்ட்டிங்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஹேஸ்டிங்ஸ், உண்மையில் எந்த தீங்கும் இழைக்கவில்லை என்பதும் கொலை குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் எந்தவித சம்மந்தம் இல்லை என்பதும் இத்தனை ஆண்டுகள் கழித்து உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, நீண்ட காலமாக சோதிக்கபடாமல் இருந்து வந்த டிஎன்ஏ சான்றுகள், தற்போது புதிய தொழில்நுட்பம் கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அது ஒரு வேறு நபரை சுட்டிக் காட்டியது என்றும், அது ஹேஸ்டிங்ஸுடையது இல்லை என்பதும் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால் ஹேஸ்டிங்ஸ் அப்பாவி என்பது உறுதியானதால் அவர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளார்.
இத்தனை நாட்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டு திரும்பிய ஹேஷ்டிங்ஸிற்கு தற்போது 69 வயதாகிறது. தான் விடுதலை செய்யப்பட்டது பற்றி பேசும் ஹேஸ்டிங்ஸ், "இந்த நாள் வர வேண்டும் என்று தான் பல வருடங்களாக வேண்டி கொண்டிருந்தேன். அதற்காக நான் இங்கே ஒரு கசப்பான மனிதனாக நிற்க விரும்பவில்லை. எனது வாழ்க்கையை நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
