'அவங்க ஜெயிச்சு வந்து... 'இத' செய்வாங்கனு நம்புறோம்!'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்?.. வியூப்பூட்டும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கமலாஹாரிஸ் எங்களை வந்து சந்திப்பார் என்று மன்னார்குடி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.
இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுவதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கமலாஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரங்கோலி கோலங்களை வீட்டு வாசலின் முன் வரைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற்ற பிறகு அவர் வந்து எங்களை சந்திப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி நேற்று முன் தினம் மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
