VIDEO: 'யார்ரா இது...! கால்ல வந்து அசிங்கம் பண்றது...' 'கண்ண தொறந்தா முரட்டு கரடி...' 'ஆஹா...! சிக்கிடோம்டா சேகருன்னு நினச்சவருக்கு...' - எதிர்பாராம நடந்த ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப்பகுதியில் கரடி நீச்சல் குளத்திற்கு வந்து மனிதரை திடுக்கிடவைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப்பகுதியில் இருக்கும் மாசசூசெட்ஸின் கிரீன்ஃபீல்டில் பகுதியில் வாழும் மத்தேயு பீட் என்பவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் வீட்டின் நீச்சல் குளப்பகுதியில் படுத்துள்ளார்.
அப்போது ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் மத்தேயு பீட்டை கரடி ஒன்று அவரது காலை நக்கி எழுப்பிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கரடியைப்பார்த்து அந்த மனிதர் ஓடுவதற்குள், திடுக்கிட்டு எழுந்த மத்தேயுவை பார்த்து கரடி ஓடிய வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை உருவாக்கினாலும் மத்தேயுவின் மனநிலையை அவரால் மட்டுமே உணர்ந்திருக்க முடியும்.
இந்த வீடியோவானது மத்தேயுவின் மனைவி, டான் பீட் என்பவரால் முகநூலில் பகிரப்பட்டு அதிக ஷேர்களையும், லைக்களையும் பெற்றுள்ளது.
மேலும் மாசசூசெட்ஸ் அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் கருப்பு கரடிகள் மாநிலம் முழுவதும் தங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்தி வருவதாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
