'இத்தன வருஷத்துல'... 'தோனி இத செஞ்சு நான் பாத்ததே இல்ல'... 'பிரபல இந்திய வீரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள'... 'CSK அணியின் பயிற்சி வீடியோ!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் கடந்த இரு வாரங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சென்னை அணியில் பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியால் திட்டமிட்டபடி பயிற்சியைத் தொடங்க முடியாமல் போனது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, அந்த 13 பேரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்ட பிறகே சென்னை அணி தன்னுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பயிற்சி வீடியோ தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், "சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பார்த்தேன். அதில் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்கிறார். அது பார்ப்பதற்கே புதிதாக இருந்தது. அவருடன் நான் பல ஆண்டுகள் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்து நான் பார்த்ததில்லை. அவர் விளையாடி நீண்ட நாள் ஆகிவிட்டதால் செய்து பார்த்திருப்பார். ஏதோ ஒரு சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசுவதை பார்க்க முடிந்தது. ஒருவேளை பந்துவீச்சாளர்களை சோதித்து பார்த்திருப்பார் என நினைக்கிறேன். அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Vaathi Coming... #WhistlePodu #HappyTeachersDay @msdhoni 🦁💛 pic.twitter.com/thbXHrgoYC
— Chennai Super Kings (@ChennaiIPL) September 5, 2020
Net. Set. Go! 🦁💛 #StartTheWhistles #Yellove #WhistlePodu pic.twitter.com/GD13SGs3x9
— Chennai Super Kings (@ChennaiIPL) September 7, 2020

மற்ற செய்திகள்
