சொன்ன மாதிரி 'கன்ட்ரோல்' பண்ணிட்டீங்க... ரொம்ப 'தேங்க்ஸ்'... 'டிரம்ப்' ட்விட்டர் பதிவால்... மீண்டும் 'கடுப்பான' மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் அப்பகுதியிலுள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் பிடியில் சிக்கி கடந்த மாதம் 25 - ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டக்களமாக மாறியது. பல இடங்களில் வன்முறையும் வெடித்தன. ஆனால் அமெரிக்கா அதிபர் டிரம்ப், போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் அவரின் இந்த கருத்து மக்களை மேலும் கொந்தளிக்க செய்தது. இதனால் மக்கள் அனைவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'டி.சி.யில் எதிர்பார்த்த அளவை விட மக்கள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதற்காக தேசிய தலைவர், ரகசிய சேவை மற்றும் டி.சி. காவலர்கள் சிறப்பாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே டிரம்ப் மீது அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்களை இந்த ட்வீட் மேலும் மக்களை வெறுப்படைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Much smaller crowd in D.C. than anticipated. National Guard, Secret Service, and D.C. Police have been doing a fantastic job. Thank you!
— Donald J. Trump (@realDonaldTrump) June 7, 2020

மற்ற செய்திகள்
