கனடாவை தொடர்ந்து 'கடுப்பேற்றிய' ஆஸ்திரேலியா... ரொம்ப 'ஆடாதீங்க' நல்லதுக்கில்ல... கடும் 'எச்சரிக்கை' விடுத்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபகாலமாக சீனா உலக நாடுகளின் வெறுப்பை கடுமையாக அறுவடை செய்து வருகிறது. கொரோனா, எல்லைப்பிரச்சினை என பல்வேறு வழிகளில் இந்தியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் வெறுப்பை சீனா சம்பாதித்துள்ளது.
இந்த நிலையில் தங்களது நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும், ஹாங்காங்கை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு 5 வருட விசா நீட்டிப்பு மற்றும் நிரந்தர குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. மேலும் ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன்னுடைய செயலுக்கு முழு விளைவையும் ஆஸ்திரேலியா ஏற்கும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி சீனா, ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.