'தன் மகனுக்கு பார்த்த 'பெண்' தன்னுடைய மகளா'?.. பெண்ணின் 'பெற்றோர்' சொன்ன 20 வருட 'ரகசியம்'.. ஆனா, கடைசியில் காத்திருந்த அல்டிமேட் 'ட்விஸ்ட்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்மகனின் திருமணம் நெருங்கும் சமயத்தில், வருங்கால மருமகளின் கையைப் பார்த்த மணமகனின் தாயார், ஒரு நிமிடம் உறைந்து போன நிலையில், அதன்பின் தெரிய வந்த உண்மை சம்பவம் ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. மணமக்களின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் சூழ, திருமணத்திற்கு இருவரும் தயாராகினர். அப்போது, மணமகனின் தாயார், தனது வருங்கால மருமகளின் கையில் பிறப்பு அடையாளம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இதற்கு காரணம், சுமார் 20 வருடங்களுக்கு முன் தொலைந்து போன தனது மகளின் கையிலும் இதே போன்று ஒரு பிறப்பு அடையாளம் இருந்துள்ளது. உடனடியாக, இதுபற்றி பெண்ணின் பெற்றோரிடம் மணமகனின் தாயார் விசாரித்துள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர்கள், தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவல் எப்படி, தனது மருமகனின் தாயாருக்கு தெரிந்தது என்பதை எண்ணி அதிர்ந்து போயினர்.
தொடர்ந்து, அந்த பெண்ணின் தாயாரும் பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தையை தாங்கள் எடுத்து வளர்த்ததாக தெரிவித்தார். இதனைக் கேட்டு உறைந்து போன மணப்பெண், அங்கேயே ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அனைவருக்கும் மேலும் ஒரு ட்விஸ்ட்டும் காத்திருந்தது.
மணமக்கள் இருவரும் அண்ணன் - தங்கை என்பதால், இந்த திருமணம் நடக்காது என அனைவரும் நினைத்த நிலையில், தனது மகள் குழந்தையாக இருக்கும் போது, காணாமல் போனதையடுத்து, பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், வேறொரு ஆண் குழந்தையை அந்த பெண் தத்தெடுத்து வளர்த்துள்ளார். இதனால், மணமக்கள் இருவரும் ஒரே தாயின் பிள்ளைகள் இல்லை என்பதால், இருவரது திருமணம் நடைபெற எந்தவித பிரச்சனையும் அமையவில்லை.
திருமண நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தாலும், பல ஆண்டுகளுக்கு பிறகு இழந்த மகளைக் கண்டு பிடித்ததால், அந்த பெண் மகிழ்ச்சியில் உச்சத்திற்கே சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
