'6 வருஷத்துக்கு முன்ன நடந்த ஒரு பிரச்சனை...' 'அப்போ தான் நான் முடிவு பண்ணினேன்...' இப்படி ஒண்ணு இருக்குன்னு யாருக்குமே தெரியாது...' - சகல வசதிகளுடன் வாலிபர் உருவாக்கிய ரகசிய குகை...!
முகப்பு > செய்திகள் > உலகம்பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடும் ஸ்பெயின் இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞர், சிறுவயதில் இருந்தே இவருக்கும் இவரின் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இது எல்லா குடும்பங்களில் நடைபெறும் சாதாரமாண விஷயம் தான். ஆனால் இதற்கு அந்த சிறுவன் செய்த செயல் தான் அவரின் பெற்றோரையே வியக்க வைத்துள்ளது.
பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் உடனே வீட்டில் இருக்க கூடாது என தோன்றும், ஆனால் நமக்கு போக இடம் இருக்காது. ஆனால் இந்த ஸ்பெயின் இளைஞரோ தங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு குகையையே உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறும் அவர், 'சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் என் பெற்றோர்கள் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனக் கூறினர். அப்போது எங்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டினேன்.
சுமார் 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய என்னுடைய குகை தற்போது கழிவறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் உருவாக்கியுள்ளேன்' எனக் கூறியுள்ளார் அந்த இளைஞர்.
இவரின் இந்த செயல் அவரின் பெற்றோர்கள் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்
