'குகைக்குள் இருந்த டாக்டர் ஸ்டூடன்ட்...' 'எங்க கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பான் சார்...' 'ஹாஸ்டல் ஃப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிச்சப்போ...' - தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் கார்கரில் உள்ள மருத்துவ கல்லூரியில், மராத்வாடாவைச் சேர்ந்த 23 வயதான மருத்துவ மாணவர் மருத்துவம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் அந்த இளைஞர் கடந்த மார்ச் 9-ஆம் தேதி, தனது விடுதியில் ஒரு லுங்கி அணிந்து, சால்வையுடன் வெளியே வந்ததாகவும், அப்போது அவரை தடுத்த விடுதி பாதுகாப்புக் காவலர் விடுதி வழிகாட்டுதலின்படி ஆடை அணியக்கூடாது என கண்டித்துள்ளார். இதைக்குறித்து சட்டை செய்யாத அந்த இளைஞர் ஏதோ புலம்பிக் கொண்டு வெளியே செல்ல முயன்றதாகவும், அதன்பின் வெளியேறும் போது பதிவேட்டில் கையெழுத்திடுமாறு இளைஞர்களைக் கேட்டுள்ளனர்.
பின் விடுதியில் இருந்து சென்ற இளைஞர் ஒரு நாள் கழித்து அவர் திரும்பி வராதபோது, விடுதி அதிகாரிகள் மாணவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
அதன்பின் அந்த இளைஞரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த 23 வயது இளைஞருக்கு ஆன்மீகத்தில் ஆழ்ந்த விருப்பம் இருப்பதாகவும், ஆன்மீகத்தை நோக்கி பயணம் செய்யவேண்டும் என அவர் அடிக்கடி சொன்னதாகவும் கூறியுள்ளனர்.
இதன்காரணமாக போலீசாரின் விசாரணை வேறொரு திசையை நோக்கி திரும்பியது. அதன்பின், நவி மும்பை முழுவதும் உள்ள தியான மையங்கள் போன்றவற்றில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கூறிய உதவி ஆய்வாளர் ஹேம்ராஜ் சாத்தே, 'காணாமல் போன இளைஞர் ஆன்மீக பற்று உள்ளவர் என்பதை நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அந்த இளைஞர்கள் இகத்புரி மையத்திற்கு வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் புத்த மதத்திற்கு மாற விருப்பம் இருப்பதாக அந்த அகாடமி ஊழியர்கள் தெரிவித்ததில் அவர்கள் அந்த இளைஞருக்கு உதவ முடியாது என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞர் அந்த இகத்புரி மையத்திலிருந்தும் வெளியேறியுள்ளார்' எனக் கூறினார்.
இகத்புரி மையத்தில் இருந்து வெளியேறிய இளைஞர் தன்னிடம் பணம் இல்லாததால் 50 கி.மீ தூரத்தில் இருக்கும் குகைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார். இதைக்கண்ட குற்றபிரிவு போலீசார் இளைஞரை மீட்டு, அவரை மீண்டும் விடுதிக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், மருத்துவ விடுதி நிர்வாகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனலாம்
