'என்னோட கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்'... இளைஞர் சொன்ன அதிர்ச்சி காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதாவது திருமணத்தின் போது மணமகன் குதிரையில் வருவது வழக்கம், ஆனால் இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் உள்ள உயர் சாதிப்பிரிவினர் இவரைக் குதிரையிலெல்லாம் பவனி வரக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தலித் நபர் காவல்துறையில் புகார் அளித்து தன் திருமணத்திற்குப் பாதுகாப்புக் கேட்டுள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் இவரது கோரிக்கையினால் விழிப்புடன் கவனித்து வருவதாகக் கூறியுள்ளார்கள். இதுகுறித்து அலக் ராம் கூறுகையில், ''எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குதிரை சவாரியுடன் தான் பழம் மரபுகள் படி திருமண ஊர்வலம் நடத்துகிறோம். எனக்கும் குதிரையில் வலம் வரும் ஆசை உள்ளது. ஆனால் சில உயர்சாதிப்பிரிவினர் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்'' எனக் கூறியுள்ளார்.
அலக் ராமின் தந்தை கயாதின் கூறுகையில், ‘என் மகனுக்கு ஜூன் 18ம் தேதி திருமணம், அதில் தான் குதிரையில் ஏறி ஊர்வலமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் இப்போது காவல்துறையில் புகார் அளித்துப் பாதுகாப்பு பெறலாம் ஆனால் பின்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர்’ என்றார்.

மற்ற செய்திகள்
