'ஜாலியா படகில் போன சுற்றுலா பயணிகள்'... 'தண்ணீருக்குள் இருந்து குபீரென எழும்பிய திமிங்கலம்'... திக் திக் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சுற்றலா பயணிகள் படகில் சென்று கொண்டிருந்த நிலையில் திமிங்கலம் ஒன்று அவர்களது படகிற்குப் பின்னால் நீரிலிருந்து திடீரென எழும்பியது.

கடந்த வருடம் ஊரடங்குக்கு முன் மெக்ஸிகோவில் உள்ள பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா அருகே சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது திமிங்கலம் ஒன்று அவர்களது படகிற்குப் பின்னால் நீரிலிருந்து வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுள்ளது. இதனை பின்னால் வந்த படகிலிருந்த புகைப்படக் கலைஞர் எரிக் ஜே ஸ்மித் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் படகிலிருந்த சுற்றுலாப் பயணிகள் இன்னொரு பக்கம் கேமராவை வைத்து தயாராக நின்று கொண்டுள்ளனர். ஆனால் திமிங்கலம் அவர்களது படகின் மற்றொரு பக்கம் சென்றுள்ளது. இந்த சம்பவம் எரிக் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே அந்த திக் திக் நிமிடங்கள் குறித்துப் பேசிய எரிக், 'நான் மற்றொரு படகில் சில அடிகளுக்கு அப்பால் இருந்தேன்.
அப்போது திமிங்கலம் மேலெழும்பி வந்ததை அனைவரும் அறிவதற்குள் நான் அதனைப் படம் படித்தேன். எல்லோரும் திரும்பிப் பார்க்கும் போது அது சரியாக உள்ளே சென்றது. திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும்.
எப்பொழுதும் அலர்ட்டாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்றார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர, ஒரு வருடத்துக்குப் பிறகு அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
