மெட்ரோ ட்ரெயின் பார்க் பண்ற இடமா இது...! 'நல்ல வேளை நுனியில அதோட வால் இருந்துச்சு...' - உச்சக்கட்ட திகில் நொடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்நெதர்லாந்து நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று திமிங்கலத்தின் வால் மீது பார்க் ஆகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்சி நகரில் டி அக்கர்ஸ் என்ற பகுதியில் இயங்கும் மெட்ரோ ரெயில் நிலையம், நகரின் உள்ள முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் மெட்ரோ ரெயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக டி அக்கரஸ் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
மேலும் அந்த ரயில் நிலையத்தின் சிறப்பம்சமே நீர் பரப்பிற்கு மேலே அமைந்து ரெயில்பாதையில் முடிவில் திமிங்கலத்தின் வால் போன்று இரண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திமிங்கல வால் அலங்கார வளைவுகள் பிளாஸ்டிக்கால் 2002-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் பயணம் முடிந்து ரயிலானது டி அக்கரஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் வந்தது. மேலும் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை என்பதால் ரெயிலின் டிரைவர் வழக்கத்தை விட சற்று வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி வேகமாக சென்றது.
கடைசியாக ரயிலானது நீர் பரப்பிற்கு மேலே அமைந்திருப்பதால் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி சென்று திமிங்கலத்தின் வால் மீது நின்றது, இன்னும் கொஞ்சம் தூரம் சென்றிருந்தால் கீழே இருக்கும் தண்ணீருக்குள் விழுந்து விடும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரெயில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார திமிங்கலத்தின் வால் மீது பாய்ந்து அந்தரத்தில் நின்றது.

மற்ற செய்திகள்
