‘டைனோசர்’ காலத்தில் வளர்ந்த மரம்.. பாறைக்கு நடுவே கிடைத்த ‘புதைப்படிவம்’.. ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 18, 2020 11:19 AM

சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மகோகனி மரத்தின் புதைப்படிவம் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Scientists find oldest piece of mahogany wood age of dinosaurs

வெப்பமண்டல காடுகளில் அதிகமாக மகோகனி வகை மரங்கள் வளர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மரங்கள் சுமார் 200 அடிக்கும் மேலாக நேராக வளரக்கூடியதாக சொல்லப்படுகிறது. டைனோசர் காலத்தில் வளர்ந்த மரமாக கருதப்படும் மகோகனி மரத்தின் ஒரு பாகத்தை கனடா நாட்டை சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வான்கவர் தீவுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது பாறைகளுக்கு நடுவே இந்த மரத்தின் புதைப்படிவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மரத்தின் புதைப்படிவத்தை ஆராய்ச்சி செய்தபோது சுமார் 72 முதல் 79 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் என தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 8 கோடி ஆண்டுகள் பழமையான மரம் என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த மரம் கிட்டத்தட்ட டைனோசர் காலத்தில் உள்ள மரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.