'மரக்கிளைகளில் தங்கிய இளைஞர்கள்...' 'சாப்பாடு மரத்துக்கு கீழ வச்சிடுவாங்க, உடனே...' வீடுகளில் தங்க வசதி இல்லாததால் எடுத்த முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 29, 2020 07:05 AM

சென்னையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த கிராமத்திற்கு திரும்பினர். அங்கு சென்ற 7 பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டில் வசதி இல்லாததால் மரக்கிளைகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

Young people isolated in tree branches due to lack of housing

மேற்குவங்கத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் சென்னை மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர்கள் வேலைபார்த்த நிறுவனம் மூடப்பட்டது. அதனால் கடந்த 24-ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் பலாரம்பூர் கிராமத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் முதலில்  கிராம சுகாதார மருத்துவர்களிடம் தங்களை பரிசோதித்து கொண்டனர். மருத்துவர்கள் இவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

பழங்குடியின இளைஞர்களின் வீட்டில் தங்குவதற்கு போதுமான வசதி இல்லாததால் கிராமத்திற்கு வெளியே பெரிய மரத்தின் கிளையில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். மரக்கிளைகள் நடுவே பலகையினால் படுக்கை அமைத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்த இளைஞர்களுக்கு மரத்திற்கு கீழே சாப்பாடு வைத்தப்பின் அவர்கள் கீழே இறங்கி வந்து தங்கள் உணவை எடுத்துக்கொண்டு மேலே வந்து சாப்பிடுகின்றனர்.

மரக்கிளைகளில் தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்களை தற்காலிகமாக அமைக்கப்படும் சிறப்பு முகாம்களில் தங்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கிராம பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Tags : #ISOLATION #TREE