VIDEO: இன்னும் ஏதாவது பேரழிவு வர சான்ஸ் இருக்கா...? 'பில்கேட்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி...' - இடியென இறங்கிய 'அந்த' பதில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ், தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டில் உலக நாடுகளை எச்சரிக்கை விடுவித்தார். இந்த நிலையில், எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் இரண்டு பேரழிவுகள் குறித்து பில்கேட்ஸ் தற்போது மீண்டும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் "Veritasium" எனும் பிரபல YouTube சானலின் டெரிக் முல்லர் என்பவரிடம் சமீபத்தில் கலந்துரையாடிய பில்கேட்ஸ் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா வைரஸ் வரும் என கணித்தீர்கள் என்று டெரிக் முல்லர் கேட்டபோது, சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது என்று தெரிவித்தார்.
மனிதர்கள் இன்னும் தயாராகாத வேறு ஏதாவது பேரழிவுகள் வர போகிறதா...? என்ற கேள்விக்கு பதிலளித்த பில்கேட்ஸ், இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும். அடுத்த பேரழிவை பற்றி பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.
உயிர்சேதத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவர் ஒரு வைரஸை உருவாக்க முடியும், தற்போதைய வைரகளை காட்டிலும் இது ஏற்படுத்தும் சேதம் அதிகமாக இருக்கும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.