ஒருத்தரோட 'தலை' கூட வெளிய தெரிய கூடாது...! 'ஒரு நகரமே வீட்டுக்குள்ள முடங்கிடுச்சு...' - எல்லாத்துக்கும் 'காரணம்' ஒரே ஒருத்தர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டவுடன் ஒட்டுமொத்த நகரத்திற்கும் லாக்டவுன் அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா ஒவ்வொரு நாடாக பரவி சின்னாபின்னமானது. ஆனால் சீனாவோ கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 113-வது இடத்தில் உள்ளது. நேற்று மட்டும் சீனாவில் 77 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் சுமார் 27 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 லட்சத்து 85 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றளவும் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முழுமையாக மீளவில்லை. தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸினால் அனைவரும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்த எச்சரிக்கை தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி போடாதவர்களும் இனியாவது போடலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.
தற்போது வியாட்னாம் நாட்டை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் டாங்ஜிங் நகரில் புதிதாக நேற்றைய தினம் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநகர நிர்வாகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி டாங்ஜிங் நகரம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வீதிக்கு வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த ஊர் மக்கள் இங்கு போல் அல்லாமல் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். யாரும் எதற்காகவும் வெளியே வரவில்லை. இதனால் சாலை, மற்றும் வீதிகள் என பொதுமக்கள் புழங்கும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுக்கே மாநகரம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உலகளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
