'அடுத்த வைரஸோட பேரு சப்பரே...' 'இது எந்த நாட்டுல கண்டு பிடிச்சிருக்காங்க...? - ஆராய்ச்சியாளர்கள் தரும் எச்சரிக்கை தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்எலிகளின் மூலம் பரவும் சப்பரே எனப்படும் எபோலா போன்ற கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதென யுனைடெட் ஸ்டேட்ஸின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பொலிவியாவின் கிராமப்புறங்களில் தோன்றியதாக கூறப்படும் ஒரு அரிய எபோலா என்ற வைரஸ் தொற்றுநோய் போல் பரவக்கூடும் என்ற அபாயம் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சப்பரே வைரஸ், அரினாவிரிடே வைரஸ் குடும்பத்திலிருந்து தோன்றிய வைரஸ் எனவும், இந்த வைரஸ் சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சலை (சி.எச்.எச்.எஃப்) ஏற்படுத்துகிறது. பொதுவாக பாதிக்கப்பட்ட எலிகளில் இருந்து நேரடி அல்லது மறைமுக தொடர்பு மூலம் பரவுகிறது. இது ஒரு அரிய நோய் என்றாலும், மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கடந்த காலங்களில் சில உயிர்களைக் இந்த வைரஸ் கொன்றுள்ளது.
சி.டி.சி ஆராய்ச்சியாளர்கள் சப்பரே வைரஸ் குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புற பொலிவியாவில் தோன்றிய இந்த அரிய வைரஸ் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட எலி வெளியிடும் சிறுநீர், நீர்த்துளிகள் மலம் வழியாக நேரடி தொடர்பு மூலமோ அல்லது மறைமுகமாகவோ இந்த கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் மூலம் மற்ற நபர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என தெரிவித்துள்ளனர். சப்பரே வைரஸ் காற்று வழியாக பரவுவதில்லை. அவை உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் மட்டுமே பரவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார வல்லுநர்களுக்கும் நோய் பரவும் பாதிப்பு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
