'இனி தைரியமா ஆபீஸ் போகலாம்...' 'அலுவலகங்களின் பாதுகாப்பிற்காக அறிமுகமாகும் பேக் டூ வொர்க் செயலி...' - அப்படி என்ன இதன் சிறப்பம்சங்கள்...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்கத்தால் சிக்கி தவிக்கும் வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஜோஹோ கிரியேட்டர், பேக் டூ வொர்க் என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோஹோ கிரியேட்டர் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பேக் டூ வொர்க் என்னும் செயலியின் மூலம் வணிக நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் ஏற்படும் பழுது மற்றும் மாற்று தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பேக் டூ வொர்க் செயலியானது இந்த ஆண்டு இறுதி வரை இலவசம் எனவும் அறிவித்துள்ளனர்.
சென்னையில் இயங்கும் software as a service (SaaS) என்ற சோஹோ கார்ப்பரேஷன் பேக் டூ வொர்க்கை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இது வணிக நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு இந்த செயலி உதவுகிறது.
ஜோஹோ கார்ப்பரேஷனின் தயாரிப்பு மேலாளர் ஹைதர் நிஜாம் இதுகுறித்து கூறும் போது, பேக் டூ வொர்க் மூலம், நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தின் பாதுகாப்பை தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணிக்க முடியும்.
மேலும் நுழைவு வாயிலில் பாதுகாப்பான முறையில் நுழைவது, பணியாளரின் ஆரோக்கியம் போன்றவற்றை கண்காணிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் ஊழியர்கள் எங்கிருந்து வருகிறார்கள், சமீபத்தில் ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுத்துள்ளார்களா என கண்டறிந்து புகார் அளிக்கிறது. மேலும் முன் கட்டமைக்கப்பட்ட டாஷ் போர்டுகளில் பணியிடத் தரவுகளை BackToWork கண்காணிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
