அதிபர் புதினை ‘சைக்கோ’ என கடுமையாக விமர்சித்த ரஷ்ய மாடல்.. சூட்கேஸில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய அதிபர் புதினின் சைக்கோ என விமர்சித்த ரஷ்ய மாடல் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் கிரெட்டா வெட்லர் (வயது 23). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், ரஷ்ய அதிபர் புதினை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ (Psychopath) என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் வருகை வெகுவாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் கிரெட்டா வெட்லர், கார் டிக்கியில் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கிரெட்டா வெட்லரின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
அதில், ‘நான்தான் கிரெட்டா வெட்லரை கழுத்தை நெரித்து கொன்றேன்’ என ஒப்புக்கொண்டதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது முன்னாள் காதலியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, சடலத்தை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதனுடன் 3 நாட்கள் தங்கி இருந்ததாகவும், அவர் இறந்தது தெரியக்கூடாது என்பதற்காக அவரின் சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாகவும் அதிகாரிகளிடம் டிமிட்ரி கொரோவின் கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
