இந்தியில் பதில் சொன்ன அமைச்சர்.. அமைச்சர் கனிமொழி கொடுத்த ரியாக்ஷன்..அதுக்கப்பறம் நடந்தது தான் ஹைலைட்டே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 16, 2022 03:51 PM

மக்களவையில் விவாதத்தின் போது இந்தியில் பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஆங்கிலத்தில் பேசுமாறு தமிழக அமைச்சர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.

MP kanimozhi insists speak in English to Piyush Goyal

மகன் MLA ..ஆனாலும் தூய்மை பணியாளராக தொடரும் தாய்.. குவியும் பாராட்டுகள்..!

இன்று கூடிய மக்களவையில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்து வருகிறார்.

கேள்வி எழுப்பிய அமைச்சர் கனிமொழி

விவாதத்தில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் படி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசுகையில் அமைச்சர் கனிமொழி ," தமிழகம் போன்ற மாநிலங்கள் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவருகிறோம். இது மாநிலம் சார்ந்த விஷயம். இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு பொருட்களை வழங்கினால் அதற்கு உரிய நிதியை யார் ஒதுக்குவது?" எனக் கேட்டார்.

MP kanimozhi insists speak in English to Piyush Goyal

இந்தியில் பதில் அளித்த அமைச்சர்

அமைச்சர் கனிமொழியின் கேள்விக்கு பதில் அளிக்க எழுந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பேசத் துவங்கினார். அப்போது இடைமறித்த கனிமொழி,"நான் ஆங்கிலத்தில் தான் கேள்வியை முன்வைத்தேன். நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தியில் பேசினால் என்னால் அதனை புரிந்துகொள்ள முடியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்றார்.

இதுகுறித்து, சபாநாயகரிடமும் கோரிக்கை வைத்தார் கனிமொழி. அதைத் தொடர்ந்து, சகோதரியை மதிப்பதாக கூறிய பியூஸ் கோயல் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

MP kanimozhi insists speak in English to Piyush Goyal

ஏற்கனவே ஒருமுறை..

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மக்களவையில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நேரடி அந்நிய முதலீடு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, அதற்கு இந்தியில் பதில் அளித்தார் பியூஷ் கோயல். ஆங்கிலத்தில் பதில் அளிக்குமாறு திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது "ஆங்கிலத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை" எனக் குறிப்பிட்ட கோயல்," எனக்கு விருப்பமான மொழியில் நான் பதில் அளிக்கிறேன். நீங்கள் ஹெட்போன் மூலமாக அதனை டிரான்ஸிலேட் செய்து உங்களது மொழியில் கேட்கலாம்" என்றார்.

MP kanimozhi insists speak in English to Piyush Goyal

இந்நிலையில், இன்றும் அமைச்சர் கோயலை கனிமொழி ஆங்கிலத்தில் பதில் அளிக்குமாறு கோரிக்கை வைத்ததும் அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கோயல் பதில் அளித்ததும் பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வேறலெவல்! சென்னை டூ பெங்களூருக்கு 25 நிமிஷத்துல போலாம்.. எப்படி?.. அசத்திய தமிழக மாணவர்கள்..

Tags : #MP KANIMOZHI #SPEAK IN ENGLISH #PIYUSH GOYAL #LOK SABHA #அமைச்சர் கனிமொழி #மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

மற்ற செய்திகள்