"மூணு தடவ அவர கொல்ல முயற்சி நடந்துருக்கு.." வெளியான அதிர்ச்சி தகவல்.. உக்ரைன் அதிபர் தப்பித்தது எப்படி??
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது கடந்த 9 நாளுக்கும் மேலாக, ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களை அதிகம் குறி வைத்து, தங்களின் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் நகரங்களிலுள்ள பல இடங்கள், உருக்குலைந்து கிடக்கிறது. அது மட்டுமில்லாமல், இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
மேலும், பொதுமக்களும் அதிகம் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும், உக்ரைனின் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை தொடர்ந்து, உக்ரைன் ராணுவம் முறியடித்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து, பொது மக்களும் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக சண்டை போட்டு வருகிறார்கள்.
கொலை செய்ய முயற்சி
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை கொலை செய்ய வேண்டி, மூன்று முறை ரஷ்ய சிறப்புப் படையினர் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'வாஷிங்டன் போஸ்ட்' இதழில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ரகசிய இடம்
அதில், 'ரஷ்யாவின் துணை ராணுவ அமைப்பான 'வேக்னர்' படைப்பிரிவில் உள்ள சில வீரர்களுக்கு, பிரேத்யேக பயிற்சிகளை அளித்து, அவர்கள் மூலம் உக்ரைன் அதிபரை கொலை செய்ய ரஷ்ய உளவுத்துறை அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்த தகவலை ரஷ்ய ராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே உக்ரைன் அரசுக்கு தெரிவித்து விட்டனர்.
அறிந்து கொண்ட உக்ரைன்
இதனால் உக்ரைன் அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் இரட்டிப்பாக அதிகரிப்பட்டது. அவர் தங்கும் இடங்களும் udanadiyagaa மாற்றப்பட்டு விட்டன' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, அதிபரின் இடம் மாற்றப்பட்டது தெரியாமல், வேக்னர் படையினர், கீவ் நகரில் இருந்த உக்ரைன் அதிபரின் ரகசிய இடத்திற்கு நுழைந்த நிலையில், இதனை ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்த உக்ரைன் ராணுவம் அவர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிர்ச்சி அமைப்பு
இன்னொரு பக்கம், ரஷ்யாவிலுள்ள கிளிர்ச்சி அமைப்பான 'சேச்சான்' படையில் உள்ள சிலர் கூட, உக்ரைன் அதிபரை தீர்த்துக் கட்ட வேண்டி, ரகசிய பாதை வழியாகவும் வந்துள்ளனர். இதுகுறித்தும், உக்ரைன் ராணுவத்தினருக்கு முன்பே தகவல் கிடைத்ததால், அவர்களையும் அடையாளம் கண்டு கொண்டனர்.
மூன்று முறை முயற்சி
இப்படி மூன்று முறை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கொலை செய்ய வேண்டி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக நானும் எனது குடும்பத்தினரும் தான் இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.