இனி அந்த லிஸ்ட்ல நீங்க யாருமே இல்லை.. உலக நாடுகளுக்கு அடுத்த ‘ஷாக்’ கொடுத்த ரஷ்யா..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கை மேற்கொண்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறி வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.
இதனிடையே உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களது விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து 17 நாடுகளை ரஷ்யா நீக்கியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
