என்னது போர்ல இவ்ளோ ரஷ்ய வீரர்கள் இறந்திருக்காங்களா..? உக்ரைன் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் நாட்டின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷ்யா தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில், இதுவரை 2203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய ரஷ்ய ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பு இகோர் கொனாஷெங்கோவ், ‘உக்ரைனில் மொத்தம் 93 விமானங்கள், 778 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 77 ஏவுகணை தாக்குதல் நடத்தும் சாதனங்கள், 279 தரையில் இருந்து தாக்குதல் நடத்தும் சிறிய ரக பீரங்கிகள், 553 சிறப்பு ராணுவ வாகனங்கள் மற்றும் 62 ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து உள்ளோம்’ என கூறினார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கான வெளி விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷ்ய வீரர்கள் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘பல்வேறு வகைகளை சேர்ந்த 999 கவச வாகனங்கள், 46 விமானங்கள், 68 ஹெலிகாப்டர்கள், 290 பீரங்கிகள், 117 நீண்ட தொலைவை தாக்கும் பீரங்கி துண்டுகள் மற்றும் 50 ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை போரில் வீழ்த்ப்பட்டுள்ளன. இதுதவிர 60 பதுங்கு குழிகள், 454 வாகனஙகள், 3 கப்பல்கள், 7 ஆளில்லா விமானங்கள் மற்றும் 23 ரஷ்யாவை சேர்ந்த விமான அழிப்புக்கான போர் சாதனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
