என்னது உக்ரைனுக்கு ஆதரவாக இவர் களத்துல இறங்கிட்டாரா.. அப்பவே வேறலெவல் சம்பவம் பண்ணவராச்சே..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக பயங்கரமான Sniper King என பெயரெடுத்த கனேடிய வீரர் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்
உக்ரைன் மீதும் 2 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் வகையில் வான்வழி தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதனால் இரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதனால் ரஷ்யா மீது இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதர தடை விதித்துள்ளன. மேலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
கனேடிய வீரர்
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக கனேடிய வீரர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலி என்ற புனைப்பெயர் கொண்ட அந்த வீரர், 2015-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பங்குபெற்றுள்ளார். இதற்கு முன்பு 2009 மற்றும் 2011-ல் கனேடிய இராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானிலும் இவர் களமிறங்கியுள்ளார்.
Sniper King
கனேடிய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் போதே, 3.5 கிலோ மீட்டர் தொலைவில் மறைந்திருந்த ஐ.எஸ் தீவிரவாதியை தமது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக சொல்லப்படுகிறது. தற்போது தனது மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் கனடாவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு, நண்பர்கள் மூவருடன் உக்ரைனுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு தேவையான உதவிகளை உக்ரைன் ராணுவம் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயத்தில் ரஷ்யா
முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டு ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை அடுத்து வாலி தமது நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று உக்ரைனுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக வாலி களமிறங்கியது ரஷ்யாவுக்கு சற்று பயத்தைக் கொடுத்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
