ஐபிஎல்-ல் அதிக வருமானம் பெறும் 3 கேப்டன்கள்.. இந்த லிஸ்ட்ல யாருக்கு ‘முதலிடம்’ தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் மூலம் அதிக வருமானம் பெற்ற வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக முடிந்துள்ளது. தற்போது 2021 ஐபிஎல் சீசனுக்கான பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. வரும் 20ம் தேதிக்குள் தங்களது அணி வீரர்களுக்கான உத்தேச பட்டியலை ஐபிஎல் அணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் துவங்கியதில் இருந்து வரும் 20201 ஐபிஎல் சீசன் வரை அதிக வருமானம் பெற்ற வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் துவக்கத்தில் இருந்தே சிஎஸ்கே கேப்டனாக தோனி இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்காக 3 ஐபிஎல் கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார். கடந்த ஆண்டை தவிர சிஎஸ்கே அணி ப்ளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை.
இந்நிலையில் வரும் ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியின் சார்பாக விளையாடுவேன் தோனி தெரிவித்திருந்தார். கடந்த ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியின்போது இதை அவர் உறுதி செய்திருந்தார்.
இதுவரை ஐபிஎல் மூலம் 137.8 கோடி ரூபாயை தோனி சம்பளமாக பெற்றுள்ளார். வரும் ஐபிஎல் சீசனில் தோனியை 15 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே இந்த சீசனிலும் தக்க வைக்க உள்ளது. இதன்மூலம் ஐபிஎல்-ல் 150 கோடி ரூபாய் வருமானம் பெறும் முதல் வீரர் என்ற நிலையை தோனி அடைவார்.
தோனியை அடுத்து ஐபிஎல் மூலம் அதிக சம்பளத்தை பெற்ற இரண்டாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் (131.6 கோடி ரூபாய்), மூன்றாவது வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும் (126.2 கோடி ரூபாய்) உள்ளனர்.