‘முரளிதரன் சாதனையை முறியடித்து’... ‘அசத்திய தமிழக சீனியர் வீரர்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் அடிலெய்டில் நடந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளது.
மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விக்கெட்டை அஸ்வின் வீழத்தியபோது, டெஸ்ட் போட்டியில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்தான் டெஸ்ட் போட்டிகளில் 191 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து, 192 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், இங்கிலாந்தின் ஆன்டர்ஸன்(186), கிளென் மெக்ராத்(172), ஷேன் வார்ன்(172), அனில் கும்ப்ளே(167) வீழ்த்தியுள்ளனர். இந்திய அளவில் சுழற்பந்துவீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் அஸ்வின்தான்.
அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 417 விக்கெட்டுகளையும், அஸ்வின் 375 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அளவில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 4-வது இடத்தில் அதாவது கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜனுக்கு அடுத்தார்போல் அஸ்வின் உள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அஸ்வின், 2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டியில் கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அசத்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்.
R Ashwin creates a new world record in India vs Australia 2nd Test in Melbourne, beats Muttiah Muralitharan’s mark of having dismissed most (191) number of left-handers in test cricket. pic.twitter.com/97VmnGJCsT
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) December 29, 2020
🗣 "'Jinks' calmness in the dressing room really provided us that stability to go out there and express ourselves in this game."
- Ravi Ashwin chats with @alisonmitchell about India's win and his plans against Steve Smith #AUSvIND pic.twitter.com/n1eIbLXQp8
— 7Cricket (@7Cricket) December 29, 2020