ராமர் ஒண்ணும் 'இந்தியர்' கெடையாது... உண்மையான அயோத்தி 'எங்க' நாட்டுல தான் இருக்கு... வாண்டட்டாக வண்டியில் ஏறும் நேபாள பிரதமர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ராமர் உண்மையில் இந்தியர் கிடையாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக நேபாளம் பல்வேறு வழிகளிலும் இந்தியாவை சீண்டி வருகிறது. முதலில் இந்திய எல்லைப்பகுதிகளை தன்னுடைய நாட்டுடன் இணைத்தது. சமீபத்தில் தூர்தர்ஷன் தவிர்த்து பிற சேனல்கள் ஒளிபரப்புக்கு தடை விதித்தது.
இந்த நிலையில் லேட்டஸ்டாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ''உண்மையான அயோத்யா இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் உள்ளது. ராமர் இந்தியர் கிடையாது, அவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் நேபாளி,'' என தெரிவித்து அடுத்த சர்ச்சைக்கு திரி கொளுத்திப்போட்டு இருக்கிறார்.
Real Ayodhya lies in Nepal, not in India. Lord Ram is Nepali not Indian: Nepali media quotes Nepal Prime Minister KP Sharma Oli (file pic) pic.twitter.com/k3CcN8jjGV
— ANI (@ANI) July 13, 2020
சீனாவின் ஆதரவு கொடுக்கும் தைரியத்தின் அடிப்படையிலேயே நேபாள பிரதமர், இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற சர்ச்சை செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறப்படுகிறது.