நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்.. இறுதி கணத்தில் நடைபெற்ற வித்தியாசமான அரச சடங்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Sep 19, 2022 11:10 PM

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Queen Elizabeth Coffin Lowered Into Royal Vault At Windsor

பிரிட்டன் ராணி

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

Queen Elizabeth Coffin Lowered Into Royal Vault At Windsor

சடங்கு

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

கடிதம்

முன்னதாக, ராணியின் மூத்த மகன் சார்லஸ் கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் ஒன்றை சவப்பெட்டி மீது வைத்து, தனது தாயும் நாட்டின் ராணியாகவும் இருந்த எலிசபெத்திற்கு பிரியாவிடை அளித்தார். இறுதியாக பிக்பைபர் எனப்படும் இசைக்கருவி இசைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ராணி காலை எழுந்திருக்கும் வேளையில் இசைக்கப்படும் இந்த இசைக்கருவி, ராணியின் வாழ்க்கை பயணம் முடிவடைந்ததை உணர்த்தும் விதமாக சோக ராகத்தை இசைக்க கூடியிருந்த மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

Tags : #QUEEN ELIZABETH #FUNERAL #ROYAL VAULT #இங்கிலாந்து ராணி #இரண்டாம் எலிசபெத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Queen Elizabeth Coffin Lowered Into Royal Vault At Windsor | World News.