'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அக்டோபர் 1, 2020 முதல் காக்னிசண்ட் ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூத்த ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஜனவரி-மார்ச் 2021-ஆம் காலாண்டில் அறிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கான மின்னஞ்சலில், காக்னிசண்டின் தலைமை மக்கள் அதிகாரி பெக்கி ஸ்க்மித், “அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் அசோசியேட் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரோகிராமர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்குகிறோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதேபோல் சீனியர் அசோசியேட்டிற்கான பதவி உயர்வு 2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும். இது பதவி உயர்வு பெற்ற அவர்களின் மேலாளர்களால் அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவி உயர்வுகள் தகுதி அடிப்படையிலானவை என்பதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போனஸ் 2019 ஐ விட அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில், அனைத்து மட்டங்களுக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்காக பதவி உயர்வுகள் ஒரே சுழற்சியில் அமல்படுத்தப்படும் என்றும் தொடர்ச்சியான உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு அதற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சுமார் 2.8 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.