‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

ஐபிஎல் முடிந்த கையோடு, இந்திய அணி, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக நாளை ஆஸ்திரேலியா செல்கிறது. வரும் நவம்பர் 27-ம் தேதி 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதனை தொடர்ந்து மூன்று டி20 போட்டியும் நடைபெற உள்ளது. கடைசியாக டிசம்பர் 17-ம் தேதி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 50 சதவீதம், அதாவது 55 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அடிலெய்டு மைதானத்தில், 27 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 27 ஆயிரம் ரசிகர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டால், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இவ்வளவு ரசிகர்கள் அனுமதிக்கப்படும் முதல் போட்டியாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப ஒருநாள் மற்றும் டி20 போட்களை தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
