விமானத்தில் அண்ணன், தம்பிக்குள் அடிதடி.. காரணத்தை கேட்டு ஷாக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

Also Read | “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
லண்டனில் இருந்து கிரீஸ் நோக்கி நேற்று பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆல்பி, கென்னத் என்ற இரு சகோதரர்கள் திடீரென சண்டையிட்டுக் கொண்டனர்.
அப்போது இருவரும் மதுபோதையில் இருந்தனர். இதில் ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர். விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் சகோதரர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனால் விமானம் கொர்பு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து வந்த போலீசார் சகோதரர்கள் இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் 50 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் சகோதரர்கள் விமானத்தில் சண்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘என்னய்யா ஒரே மர்மமா இருக்கு’.. தானாக பின்னால் வந்த சைக்கிள் ரிக்சா.. திகில் வீடியோ..!

மற்ற செய்திகள்
