போச்சுடா...இலங்கை T20 தொடரில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் நீக்கம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் காரணமாக, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடிக்கும்போது கூப்பிடல... கோபத்தில் நண்பர் செய்த பகீர் காரியம்... சென்னையில் பரபரப்பு..!
சூரிய குமார் யாதவ்
இலங்கை அணிக்கு எதிரான போட்டி நடைபெறும் லக்னோ மைதானத்திற்கு சூரிய குமார் வந்தாலும் அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. மேலும், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் உடனான T20 தொடரில் அபாரமாக விளையாடிய சூரிய குமார் யாதவ், முதல் போட்டியில் 18 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். இரண்டாவது போட்டியில் 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் மூன்றாவது போட்டியில் 31 பந்துகளை சந்தித்து 65 ரன்களை விளாசி மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சூரிய குமார் யாதாவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது தீபக் ஹுடாவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரிஷப் பண்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சூரிய குமார் யாதவும் இல்லாதது பேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்துமோ? என ரசிகர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
தீபக் சஹாரும் இல்லை..
மேற்கு இந்தியத் தீவுகள் உடனான மூன்றாவது T20 போட்டியில் காயம் காரணமாக ஸ்பெல்லை முடிக்காமல் வெளியேறிய தீபக் சஹாரும் இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியா பாஜக? - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மற்ற செய்திகள்
