பெட்ரோல், டீசல் வண்டியா செல்லாது…செல்லாது..! உங்களயெல்லாம் ஊரவிட்டு ஒதுக்கி வச்சாச்சு..! என்னங்க புது ரூல்ஸா இருக்கு..?
முகப்பு > செய்திகள் > இந்தியாபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எல்லைக்குள் அனுமதி கிடையாது என தலைநகர் டெல்லியில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் கடுமையான காசு மாசுபாட்டைக் கட்டுக்குள்ளேயே வைக்கும் நோக்கில் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் தற்போது காற்றின் தரம் கடந்த மாதத்தை விட சற்று இந்த மாதம் உயர்ந்து உள்ளதாம். அதனால், டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி முதல் மாணவர்கள் நேரடியாக கல்வி நிலையங்களுக்கே வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், வருகிற நவம்பர் 29-ம் தேதி முதல் தலைநகர் டெல்லிக்குள் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காற்றின் தரத்தை கூடுதல் மாசுபாடுகளுக்கு உட்படுத்தாமல் இருக்க இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு டெல்லிக்குள் அனுமதி இல்லை.
வருகிற நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதன் பின்னர் காற்றின் தரம் பொருத்து உத்தரவுகள் மாறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லியினுள் CNG அல்லது எலெக்ட்ரிக் ரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும், சேவைத் துறையில் அத்தியாவசிய பணியாளர்கள் இருக்கும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் தனியார் CNG பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதனால், அரசு ஊழியர்களில் வீடுகளில் இருந்து அலுவலகங்களுக்கு இந்தப் பேருந்துகள் மூலமாகவே பயணிக்க முடியும். கடந்த 3 நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.