பதவியை இழந்த தான் மிகவும் ஆபத்தான நபர் என்பதை எதிர்க்கட்சிகள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என இம்ரான் கான் பேசியிருப்பது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

Also Read | "என்ட பேரு ஸ்டாலின்" - இவ்ளோ அழகா மலையாளத்தில் சம்சாரிக்குறாரே... ட்ரெண்ட் ஆகும் முதல்வரின் பேச்சு
பதவி விலகிய இம்ரான் கான்
சமீப நாட்களாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவந்தன. இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ-இன்சாப் கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை கட்சிகள் வாபஸ் வாங்கியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது அக்கட்சி. இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியிடம் சென்றிருக்கிறது ஆட்சி.
ஆவேசம்
இந்நிலையில், நேற்று இரவு பெஷாவர் நகரில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார் இம்ரான் கான். அந்த கூட்டத்தில் பேசிய அவர்," பாகிஸ்தானில் ஒவ்வொரு முறை பிரதமர் பதவி விலகும்போதும் மக்கள் அதனை கொண்டாடுவர். ஆனால், நான் பதவி விலகியதை மக்களே எதிர்க்கின்றனர். மக்களால் நடத்தப்படும் போராட்டங்களே இதற்கு சாட்சி. அமெரிக்காவின் சதியால் நான் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளேன். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசு தற்போது பாகிஸ்தானை ஆட்சி செய்துவருகிறது" என்றார்.
ஆபத்தானவன்
இந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்," நான் பிரதமராக பதவி வகித்தபோது என்னை பார்த்தவர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள். பதவியில் இருக்கும் போது நான் ஆபத்தானவாக இல்லை. ஆனால், பதவி இல்லாத இம்ரான் கான் மிகவும் ஆபத்தானவன். எதிர்க்கட்சிகள் இதனை விரைவில் புரிந்து கொள்வார்கள்" என்றார்.
மேலும், இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் இதனை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.
பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் இளைய சகோதரரான ஷெபாஸ் ஷெரீஃப் தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 'சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்".. எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.. பின்னணி என்ன?

மற்ற செய்திகள்
