இனி 'இப்படி' தான் பண்ணியாகணும்...! 'வேற வழி இல்ல...' 'கடுமையான நிதி நெருக்கடி...' - பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Aug 04, 2021 05:28 PM

பொருளாதார நெருக்கடி அதிகமாக இருப்பதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு கிடைக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

pakistan pm Imran Khan residence available for rent

பாகிஸ்தான் பிரதமர் தங்கள் நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒரு வித்தியாசமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது, பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் இப்போது திருமணங்கள், பேஷன் ஷோக்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு பிரதமர் குடியிருப்பு இல்லத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்ததை அடுத்து, தற்போது பிரதமர் இல்ல வளாகத்தில் மக்கள் கலாச்சார, பேஷன், கல்வி மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடிவு செய்துள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் இல்லத்தின் மூலம் வருவாயைப் பெறுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கும் என்றும் ஆடிட்டோரியம், இரண்டு விருந்தினர் இல்லங்கள் மற்றும் ஒரு புல்வெளி பரப்பையும் வாடகைக்கு விட்டு நிதி திரட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களால் குறைந்துள்ளது. இதன்காரணமாக அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்க இம்ரான் கான் புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார்.  மேலும் பதவியேற்ற பின்பு, இம்ரான் கான் பொது நலத் திட்டங்களுக்கு செலவிட அரசாங்கத்திடம் போதுமான அளவு பணமில்லை என அறிவித்தார். ஆனால், இந்த நிலையிலும் நாட்டில் சில மனிதர்கள் அரசர்கள் போல் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistan pm Imran Khan residence available for rent | World News.