'மியா இத கவனிச்சீங்களா'... 'ரசிகர் கொடுத்த அலெர்ட்'... 'ஓஹோ என்னையவா பிளாக் பண்றீங்க'... 'மியா கலீஃபா' கொடுத்த நெத்தியடி பதில்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 25, 2021 07:36 PM

சமீப காலமாக மியா கலீஃபாவின் கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Pakistan bans Mia Khalifa\'s TikTok account, Her reaction is epic

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மியா கலீஃபா, தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து  தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கை மூன்றாவது முறையாக முடக்கி இருக்கிறது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் எந்தவொரு அறிவிப்பும் விடுக்காமல் மியாவின் டிக்டாக் கணக்கைத் தடை விதித்துள்ளது.

Pakistan bans Mia Khalifa's TikTok account, Her reaction is epic

இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் உள்ள காரணம் குறித்தும் தகவல் தொடர்பு ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. முன்பு இதைப் போன்று இரண்டு முறை மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கைத் தடை செய்து பின்னர் அதனை விடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. "ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற" வீடியோக்கள் இருப்பதாகக் கூறி இரண்டாவது தடை விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பு இரண்டு முறை மியா கலீஃபாவின் டிக்டாக் கணக்கைத் தடை செய்து பின்னர் அதனை விடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. "ஒழுக்கக்கேடான மற்றும் நெறிமுறையற்ற" வீடியோக்கள் இருப்பதாகக் கூறி இரண்டாவது தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முறை தடை விதிக்கப்பட்டதை மியாவின் ரசிகர் ஒருவரே அவருக்கு ட்விட்டர் மூலம் அறிவித்தார். அதன்பிறகே மியாவுக்கு இதுகுறித்து தெரியவந்தது.

Pakistan bans Mia Khalifa's TikTok account, Her reaction is epic

இதையடுத்து ரசிகரின் செய்தியை மேற்கோளிட்டு ட்வீட் செய்தார். அதில், ''எனது டிக்டாக் கணக்கை நாட்டிலிருந்து தடை செய்ததற்காகப் பாகிஸ்தானுக்கு எதிராகக் குரல் கொடுங்கள். பாசிசத்தைத் தவிர்க்க விரும்பும் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்காக எனது அனைத்து டிக்டாக் வீடியோகளையும் இப்போதிலிருந்து ட்விட்டரில் பதிவிடுகிறேன்'' எனப் பதிலளித்துள்ளார்.

மியாவை டிக்டாக்கில் 22.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், தனது வீடியோக்களுக்கு இதுவரை, 270 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் பெற்றுள்ளார். மியா கலீஃபா கடந்த காலங்களில் ட்விட்டரில் பல விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.

Pakistan bans Mia Khalifa's TikTok account, Her reaction is epic

சமீபத்தில் இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். "என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது?" என்று அப்போது ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MIA KHALIFA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistan bans Mia Khalifa's TikTok account, Her reaction is epic | World News.