‘வாய் தவறி அப்படி சொல்லிட்டார்’!.. சர்ச்சையை கிளப்பிய இம்ரான் கான் சொன்ன விஷயம்.. ஒரு வருசம் கழிச்சு பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 28, 2021 12:44 PM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மறைந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி எனக் கூறிய சர்ச்சைக்கு அந்நாட்டு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Pak minister clarifies Imran Khan’s martyr remarks on Osama bin Laden

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதிக்கு வந்த அமெரிக்க ராணுவத்தினர், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்’ என்று பேசியிருந்தார். இம்ரான் கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

Pak minister clarifies Imran Khan’s martyr remarks on Osama bin Laden

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தற்போது இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், ‘பிரதமர் இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Pak minister clarifies Imran Khan’s martyr remarks on Osama bin Laden

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தியது. ஒசாமா பின்லேடன் அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் அப்போது திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pak minister clarifies Imran Khan’s martyr remarks on Osama bin Laden | World News.