'இந்த தண்டனையை கேட்டப்போவே...' சத்தியமா அள்ளு கழண்டுருக்கும்...! 'பாலியல் குற்றவாளிகளுக்காக...' - நைஜீரிய நாட்டின் அதிரடி தண்டனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 18, 2020 06:55 PM

நைஜீரியா நாட்டில் பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிறப்புறுப்பு அகற்றப்படும் என அதிரடி சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

nigeria law removes genitals sexual offenses against women

கொரோனா காலகட்டத்தில் நைஜீரியா நாட்டில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல தரப்புகளில் இருந்தும் கேள்விகளும், அழுத்தங்களும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது நைஜீரிய அரசு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களை குறைக்க அதற்குண்டான சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்ததுள்ளது.

நைஜீரிய நாட்டின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது இதுகுறித்து கூறும் போது, 'நம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாகும் பாலியல் வண்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவே தற்போதய இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டதுள்ளது.

இதற்கு முன் உள்ள சட்டப்படி, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுவர் சிறுமிகளை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்துவோருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த சட்டமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இயற்றியுள்ள புதிய சட்டப்படி கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் பிறப்புறுப்பு குழாய் அகற்றப்படும் மற்றும் குழந்தைகளை பாலியல்  பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை பாலியல்  துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் (பாலோப்பியன் குழாய்) அகற்றப்படும்' எனவும் கூறியுள்ளார்.

Tags : #LAW #NIGERIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nigeria law removes genitals sexual offenses against women | World News.