'ஃபோர்னோகிராபி பாக்குறது மட்டும்தான் தப்பில்ல!'.. 'சைல்டு ஃபோர்னோகிராபி பார்த்தாலே 'இந்த' சட்டமெல்லாம் பாயும்ல!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 10, 2019 09:06 PM
குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச படங்களை உருவாக்குபவர்கள், பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள், பகிர்பவர்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி பேசும்போது லிஸ்டில் இருக்கும் அத்தனை பேரின் மீதும் சட்டம் பாயும் என்று குறிப்பிட்டுள்ளார்.
'பீடோஃபைல்' என்கிற ஒரு வகை மனோவியாதி காரணமாக குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் குழந்தைகளை பாலியல் வக்கிர நோக்கில் பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய தண்டனை சட்டங்களை பொருத்தவரை, `போர்னோகிராஃபி' எனப்படும் ஆபாசப் படங்கள் மற்றும் 'சைல்டு போர்னோகிராஃபி' எனப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் உள்ளிட்டவற்றுள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 67 A, ஒருவர் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் ஒரு நுகர்வோராக காணுவதை குற்றச் செயலாக வரையறுக்காமல், அப்படியான படங்களை மின்னணு வடிவில் வெளியிட்டாலோ, பகிர்ந்தாலோ குற்றச் செயலாக வரையறுக்கிறது.
இதேபோல் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு எண் 67 B குழந்தைகளின் ஆபாசக் காணொளிகள், படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, பகிர்வது பார்ப்பது உள்ளிட்டவற்றை குற்றமாக வரையறுப்பதோடு, இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்குகிறது. 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ' சட்டமோ, குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரை அளிக்கிறது.
அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்தவர்கள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரே நேரத்தில் 1,300 பேர் அதிக பட்சமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நீதிமன்றம் குழந்தைகளின் ஆபாசப் படங்களை விநியோகிக்கும் ஒரு நபருக்கு 1,335 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருப்பது போல 1000 பேருக்கு மேல் குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தவர்களும், பகிர்தவர்களும், உருவாக்குபவர்களும், பதிவிறக்கம் செய்பவர்களும் இருக்கிற பட்டியல் போல் நீண்டதொரு பட்டியல், உலகிலேயே இல்லை என்கிறது அதிர்ச்சி ரிப்போர்ட்!