"இது என்ன உயிரினம்னே தெர்ல..இப்படி ஒன்ன யாரும் பாத்திருக்கக்கூட மாட்டாங்க".. பீச்ல வாக்கிங் போன பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 30, 2022 01:55 PM

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Mysterious creatures spotted in Australia baffle beachgoers

கடல்

ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல். உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாளும் கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.

Mysterious creatures spotted in Australia baffle beachgoers

வித்தியாசமான உயிரினம்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் வித்தியாசமான உயிரினம் ஒன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த கடற்கரைக்கு எப்போதும் விக்கி ஹேன்சன் வாக்கிங் செல்வது வாடிக்கை. அப்படி கடந்த வார சனிக்கிழமை தனது செல்ல நாயுடன் பீச்சுக்கு சென்றிருக்கிறார் அவர். அப்போது தூரத்தில் நீளமாக ஏதோவொன்று கிடப்பதை பார்த்த அவர் ஆர்வத்துடன் அதன் அருகே சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ஒன்ன பார்த்ததே இல்ல

இதுபற்றி பேசிய அவர்,"மணலில் நீளமாக கிடந்த அந்த உயிரினத்தின் மீது பல வண்ண கலவைகளால் ஆன, இறக்கைகள் போன்ற அமைப்பு இருந்தது. அவை அசைந்து கொண்டிருந்தன. அந்த உயிரினத்தின் இன்னொரு பாதி கடலிலேயே துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என எண்ணினேன். நான் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை. யாரும் இப்படி ஒரு விநோதத்தை பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை" என்றார்.

Mysterious creatures spotted in Australia baffle beachgoers

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு விக்கி சென்றிருக்கிறார். அப்போது எந்த அசைவுகளும் இன்றி அந்த உயிரினம் கிடந்திருக்கிறது. ஆகவே அது உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக கூறியுள்ளார் விக்கி. இதனிடையே இந்த வினோத உயிரினத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பல்வேறு வகையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

Tags : #SEA #MYSTERY #CREATURE #கடல் #உயிரினம் #கடற்கரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mysterious creatures spotted in Australia baffle beachgoers | World News.