மனித வரலாற்றிலேயே இந்த மீன கொஞ்ச பேர் தான் பாத்திருப்பாங்க.. கரை ஒதுங்கிய ராட்சச பீஸ்ட் மீன்.. தீயாய் பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 28, 2022 11:50 PM

நியூசிலாந்து நாட்டின் கடற்கரை ஒன்றில் ராட்சச மீன் கரை ஒதுங்கிய சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Extremely Rare Giant Serpent Like Creature Washes Ashore

பீச்-ல காத்திருந்த பீஸ்ட்

நியூசிலாந்து நாட்டில் உள்ள டுனேடின் (Dunedin) கடற்கரை அன்று வழக்கம்போல சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து வழிந்தது. காலையில் உடற்பயிற்சிக்கு வந்தவர்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டுவந்தனர். எல்லாம் அந்த மீன் கரை ஒதுங்கும் வரைதான். பீச்சில் வாக்கிங் சென்ற ஐசக் வில்லியம்சன் என்பவர் தான் முதலில் அந்த ராட்சத உருவத்தினை பார்த்திருக்கிறார். அதன்பிறகு அங்கு இருந்த கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த மீனை கண்டதும் திகைத்துப்போயிருக்கிறார்.

Extremely Rare Giant Serpent Like Creature Washes Ashore

இதனை அடுத்து இந்த விஷயம் தீயாய் பரவ, ஓட்டகோட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரிடி ஆலன் கடற்கரைக்கு நேரில் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்பமுடியவில்லை. ஏனென்றால் அங்கே கரை ஒதுங்கி இருந்தது 12 அடி நீளமுள்ள ஓர் மீன் (oarfish)

அரியவகை மீன்

பாம்பு போன்ற உடலமைப்பை கொண்ட இந்த மீன் வழக்கமாக கடலில் 900 மீட்டருக்கு அடியில் மட்டுமே வாழும். படகின் துடுப்பு போல இவை உடலை அசைத்து முன்னேறுவதால் இதனை துடுப்பு மீன் என்றும் அழைக்கிறார்கள்.

Extremely Rare Giant Serpent Like Creature Washes Ashore

கரை ஒதுங்கிய மீன் குறித்து பேசிய டாக்டர் ஆலன்," அது உயிருடன் இருந்தது. ஆனால் அது மிகவும் பலவீனமாய் காணப்பட்டது. அதனை மீண்டும் நீந்த வைக்க எங்களது குழுவினர் முயற்சித்தனர். ஆனால் அது உயிர் பிழைத்திருக்காது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அது தண்ணீரில் நீந்தாமல் மேலே மிதந்தபடியே சென்றது" என்றார்.

இந்த கடற்கரையில் நிறைய பள்ளத்தாக்குகள் இருப்பதாகவும் அவற்றிலிருந்து இந்த மீன் வந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டாலும் அவை அனைத்தும் யூகமே என்கிறார் ஆலன். ஒடாகோ அருங்காட்சியகத்தில் இயற்கை அறிவியல் காப்பாளராக உள்ள எம்மா பர்ன்ஸ் இதுபற்றி கூறுகையில், "ஓர் மீனின் முதல் மாதிரிகளில் ஒன்று மற்றொரு ஒடாகோ கடற்கரையான மோராக்கியில் இருந்து சேகரிக்கப்பட்டு 1883 இல் லண்டனுக்கு அனுப்பப்பட்டது. அந்த 3.81 மீட்டர் மாதிரி இப்போது இயற்கை வரலாற்று அருங்காட்சியக சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது" என்றார்.

Extremely Rare Giant Serpent Like Creature Washes Ashore

இந்த மீனை வரலாற்றில் சிலர் மட்டுமே பார்த்திருக்க முடியும் என்கிறார்கள் கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள். பல மீட்டர் நீளம் வரையில் வளரக்கூடிய இந்த மீன் உலகம் முழுவதும் உள்ள கடல்களில் வசித்துவந்தாலும் இப்படி கரை ஒதுக்குவது மிகவும் அபூர்வம் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

Tags : #FISH #OARFISH #NEWZEALAND #நியூசிலாந்து #கடற்கரை #ராட்சசமீன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Extremely Rare Giant Serpent Like Creature Washes Ashore | World News.