"சரியா தூக்கமே வரல.." 10 வருசமா துபாயில் கூலி வேலை.. ஒரே நாளில் தலைகீழான இந்தியரின் வாழ்க்கை
முகப்பு > செய்திகள் > உலகம்தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற்ற பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில் மிக சில நாட்களை தான் செலவிட முடியும்.
இப்படி பல தியாகங்கள் செய்து, கஷ்டப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ராம்நாகினா என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் கூலி தொழில் செய்து வருகிறார்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கூலி தொழில் செய்து வரும் ராம்நாகினாவுக்கு அசத்தலான அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. 44 வயதான ராம் நாகினாவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற Mahzooz லாட்டரி டிராவின் 86 வது சுற்றில் பெரிய பரிசுத் தொகையை வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 1 லட்சம் திர்ஹாம் பரிசாக அவருக்கு கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான ராம்நாகினா, கடந்த 10 வருடங்களாக துபாயில் பணி செய்து வந்துள்ளார். அப்படி ஒரு வேளையில் தான், தற்போது லாட்டரியில் இத்தனை பெரிய பரிசு வெற்றி பெற்றுள்ளதால், மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசும் ராம்நாகினா, "எனக்கு சிறந்த அதிர்ஷ்டம் ஒன்று கிடைத்துள்ளது. Mahzooz டிரா குறித்து என்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல், நான் தொடர்ந்து இந்த லாட்டரி டிராவில் பங்கேற்று வருகிறேன். ஆனால், இவ்வளவு பெரிய ஒரு பரிசு தொகையை நான் வீட்டிற்கு எடுத்து செல்வேன் என்று நினைக்கவே இல்லை.
நான் வெற்றி பெற்றேன் என்பது தெரிந்ததும் என்னால் சரிவர தூங்க கூட முடியவில்லை. இன்னும் இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. எனது வாழ்க்கையை மாற்றிய இந்த பரிசு தொகைக்காக நான் Mahzooz டிராவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராம்நாகினா குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில், லாட்டரி டிராவில் நடக்கும் அதிர்ஷ்டத்தால், ஒருவரின் வாழ்க்கை மாறும் செய்திகளை நாம் நிறைய படித்து இருப்போம். அந்த பட்டியலில், தற்போது ராம்நாகினாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.