"ஸ்கேனை உத்து பாத்தப்போ இவர் முகம் தான் தெரியுது!".. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sivasankar K | Jan 14, 2021 11:44 PM

பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது ட்ரம்பின் முகம் அதில் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.‌

mum spots Trump face in her baby scan picture

பிரிட்டன் Newcastle பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் Leanne Harris. கர்ப்பிணியாக இருக்கும் இவர் 20 வாரங்களாக தொடர்ந்து குழந்தையை கருவில் சுமந்து வருகிறார். அண்மையில் இப்பெண் தனது குழந்தையின் ஆரோக்கியத்துக்காக வழக்கம்போல் மருத்துவமனை சென்று பரிசோதித்தார். அப்போது அவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது.

ALSO READ: அதிகரிக்கும் சர்ச்சை.. டிரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கம் தொடர்பாக மௌனம் கலைத்த ‘ட்விட்டர் சிஇஓ’!

அந்த ஸ்கேனில் கண்ட காட்சியைப் பார்த்து Leanne Harris அதிர்ந்துள்ளார்.  அந்த ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் முகம் வித்தியாசமாக இருப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது. இதனால் முதலில் குழப்பம் அடைந்த Leanne Harris அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட இணையவாசிகளில் ஒருவர் குழந்தையின் தலையில் ஏதோ இருப்பதாக குறிப்பிட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்லி இருக்கின்றனர்.

பிறகு ஸ்கேன் ரிப்போர்ட்டை நன்றாக உற்றுப் பார்த்தபோது தனக்கு ட்ரம்பின் முகம் போன்று அதில் தெரிந்ததாக Leanne Harris குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "ப்ளீஸ்.. நேரம் வரும்போது நாங்களே 'கண்டண்ட்' கொடுப்போம்!.. இத மட்டும் பண்ணாதீங்க!"... கோலி வைத்த ‘கோரிக்கை!’

இந்த வருடத்தின் துவக்கத்தில் Chelsea Furnival எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் எடுத்த ஸ்கேனிங்கின் போது குழந்தை ஒன்று நடுவிரலை காண்பிப்பது போல இருக்கும் இன்னொரு புகைப்படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mum spots Trump face in her baby scan picture | World News.