இங்கிலாந்து அரசரிடம் மேகன் மெர்க்கல் வச்ச கோரிக்கை.. யாருமே இதை எதிர்பார்க்கவே இல்ல.. என்ன நடந்துச்சு..?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசை தனியாக சந்தித்து பேச மேகன் மெர்க்கல் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேகன் கலிபோர்னியா திரும்புவதற்குள் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

ராணியின் மறைவு
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
மேகன் மெர்க்கல்
இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் மகன் ஹாரி. இவர் சசெக்ஸ் பகுதியின் ஆட்சியாளராக அறியப்படுகிறார். மேகன் மெர்க்கலை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹாரி தனது மனைவியுடன் கலிபோர்னியாவில் தற்போது வசித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்டதால் ஹாரிக்கும், அரச குடும்பத்திற்கும் ஏற்கனவே மனக்கசப்புகள் இருந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில், இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மனைவியுடன் நேரில் வந்திருந்தார் ஹாரி.
தற்போது ஹாரி தனது மனைவியுடன் விண்ட்சர் கோட்டையில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மேகன் அரசர் சார்லசை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடிதம்
இதற்காக முறைப்படி சார்லஸிற்கு மேகன் கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. கணவருடன் மேகன் கலிபோர்னியா திரும்புவதற்கு முன்னர், இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டுகிறது. இந்த சந்திப்பின் போது, அரச குடும்பத்தில் உள்ள இறுக்கமான சூழ்நிலையை போக்கிட மேகன் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மன்னர் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதேநேரத்தில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சார்லசை நேரில் சந்தித்து பேச மேகன் கோரிக்கை வைத்திருப்பது அரச வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், மேகனின் இந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் தம்பதி.. நெகிழ வைக்கும் பின்னணி..!

மற்ற செய்திகள்
